#chithiraitv #அதிமுக ஆட்சியில் தூர்வாரியதில் பல கோடி ஊழல் மன்னார்குடியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி |

chithiraitv 2021-11-15

Views 0

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கோட்டூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையினால் விளை நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புழுதிக்குடியில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா,கூரை பகுதி சேதம், கால்நடை இறப்பிற்கான நிவாரணம், முதியோர் உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,, வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஆகிய நானும், அமைச்சர்கள் குழுவும் நேரில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறோம்.
அமைச்சர்கள்,களப் பணியாளர்கள்,அதிகாரிகள் என அனைவரும் துரிதமாக செயல்பட்டு பாதிப்பை குறைத்திருக்கிறோம். விவசாயிகளுடைய கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டு பெற்றிருக்கிறோம். அமைச்சர்கள் ஆரம்பகட்ட ஆய்வினை முடித்து இருக்கின்றனர்.நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 17 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 68 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கிறது. இயன்ற அளவு பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு காப்பாற்ற முடியாத நிலங்களில் மறு உழவு செய்வதற்கு உதவி செய்யப்படும். கிராம வாரியாக முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஆட்சிக்கு வந்தவுடன் டெல்டா மாவட்ட பிரச்சனைகளை புரிந்து கொண்டு 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,000 கிலோ மீட்டருக்கு தூர்வாரி அதன் பயனாக தற்போது வெள்ள பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது பெரும் மழையினால் தேங்கியிருக்கும் நீரும் இதன் மூலம் விரைவில் வெளியேறும். இதேபோல கன்னியாகுமரியில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக இன்று கிடைத்த தகவலை தொடர்ந்து ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அமைச்சர்களுக்கு துணையாக மேலும் இரண்டு அமைச்சர்கள் தற்போது அங்கு சென்றுள்ளனர். உழவர்களை எப்போதும் கண் போன்று காக்கும் அரசு திமுக அரசு. நடப்பு வடகிழக்கு பருவ மழையின் காரணமாக 4 நாட்களில் மிக அதிக மழை பெய்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் நீர் மேலாண்மை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த தனி குழு அமைக்கப்பட்டு , நிரந்தர தீர்விற்கு வழிவகை செய்யப்படும். 15 ஆம் தேதியுடன் காப்பீட்டுக்கு விவசாயிகள் பிரீமியம் செலுத்தும் தேதி முடிவடையும்.இதனை நீட்டிக்க சொல்லி மத்திய அரசிடம் கேட்டு இருக்கிறோம். மேலும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள காப்பீட்டு தொகையையும் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் கேட்டிருக்கிறேன். அவரும் விரைவில் வழங்குவதாக உத்தரவாதம் அளித்து இருக்கிறார் என கூறினார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு , நகர்ப்புற வீட்டுவசதி துறை அமைச்சர் கே.என் நேரு,கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன்,மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட வேளாண் துறை அதிகாரிகள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#tncmmkstalin #tngovt #mkstalin #dmk #tamilnadufloods #mkstalinpressmeet

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS