வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது :- வளர்ந்த நாடுகளை போல பெண்களின் பாலினம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. 1000 ஆணுக்கு 1020 என பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பெண் குழந்தைகளை பற்றிய பார்வை மாறியிருப்பது இந்த அறிக்கை வாயிலக தெரிகிறது. கேஸ் விலை குறித்த கேள்விக்கு தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்றார். திமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு ஆட்சியில் இல்லை என்றால் ஒரு பேச்சு. அரசியலுக்காக தேர்தலை தள்ளிபோடுவது,தேர்தல் வைக்க கேட்பது திமுகவுக்கு வாடிக்கை. கோவையில் உள்ள சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைக்கு ஏற்ப அரசாங்கம் செயல்படவில்லை என குற்றம் சாட்டினார். ஒப்பந்தத்தை சொல்லி காலம் தாழ்த்த வேண்டாம் என்றார்.