#anmmedia24 #onlyforbjpnews #விருதுநகர் பாஜக சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்கள் 97வது பிறந்த தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டம்
விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 97ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு கட்டையாபுரம் தெரு, நெல்லுக் கடை மைதானம் மற்றும் விருதுநகர் - மதுரை ரோட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து , கொடிக்கம்பத்தில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் இந்த நிகழ்சியில் மாவட்ட தலைவர் கஜேந்திரன், அரசு தொடர்பு துணை தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட செயலாளர் பொன்ராஜன்,தொழில்நுட்ப மாவட்ட தலைவர் பிரதீப், துணைத் தலைவர் செல்வகுமார், கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சங்கரேஸ்வரி , செ .காமாட்சி, கோட்ட பொறுப்பாளர் செந்தில், மாநில பொறுப்பாளர் பிஎஸ்என்எல் குருசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.