விருதுநகர் பாஜக சார்பில் மகாத்மாகாந்தியின் 153 வது பிறந்த தினம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 46வது நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
விருதுநகரில் பாஜக சார்பில் மகாத்மா காந்திஜியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்பு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 46-வது நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜர் இல்லம் சென்று அவரது திருவுருவப சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் உள்ள மாவட்ட தலைவர் கஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் பொன் ராஜன், அரசு தொடர்பு மாவட்ட துணை செயலாளர் பாண்டுரங்கன், கோட்ட பொறுப்பாளர் செந்தில், நிர்வாகி காமாட்சி, மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியல் அணி குருசாமி , நகர தலைவர் புஷ்ப குமார், நகர செயலாளர் ஜித், துணைத்தலைவர் சங்கரேஸ்வரி, வர்த்தக மாவட்ட தலைவர் சுப்பாராஜ் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.