#cithiraitv #கோவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு.
திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை பிரதமர் காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார் . அந்த திறப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம்
கோவை வந்தடைந்த மத்திய இணையமைச்சர்
எல். முருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றும் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் இன்று ஓரே நேரத்தில் அர்ப்பணிக்கிறார் எனவும் தெரிவித்தார். 4080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளால்., 1450 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்கபெறும் என கூறினார். மேலும் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் இன்று 20 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது என கூறிய அவர் அதில் பழங்கால மற்றும் சங்ககால புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் பிரதமர் திருக்குறளை முன்னிலைபடுத்தி வருகின்றார் என்றும்
100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். விவேகானந்தர் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம். ஆல் இந்தியா ரேடியோ (AIR) மூடப்படாது. முதல்வரின் தமிழ்புத்தாண்டு குறித்த கேள்விக்கு , அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு சித்திரை ஓன்றுதான்.
11 மருத்துவகல்லூரிகள் மட்டுமின்றி தமழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகளும் நடைபெற்று வருகின்றது. அதற்கென ஒரு காலவரம்பு இருக்கின்றது என கூறினார். மேலும் தமிழகத்தற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் வரும். தமிழக மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள் DD தொலைக்காட்சி நிறுவனத்திற்கு குரூப் 1 அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.