#cithiraitv #திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ஊழல் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி பேட்டி

chithiraitv 2022-01-17

Views 1

#cithiraitv #திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது, மேலும் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றியது அதிமுக அரசு ஆனால் இந்த நிகழ்ச்சி சரியாக நடக்கக்கூடாது. இளைஞர்கள் உயிர் பறி போகவேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக அரசு ஜல்லிக்கட்டு நிகழ்சிகளை நட்த்துவதாக அதிமுக முன்னாள் தமிழக வளர்ச்சித் துறை அமைச்சரும் மற்றும் கழக கொள்கை பரப்பு துணைசெயலாளருமான க.பாண்டியராஜன் விருதுநகரில் பேட்டி

MGR அவர்களின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் அவரது திரு உருவசிலைக்கு அதிமுகவினருடன் மாலை அணிவித்து மரியாதை செய்தபின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது.,
எம்ஜிஆர் பிறந்த நாளில் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியுடன் வந்து எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். தொண்டர்கள் எழுச்சியை பார்க்கும்போது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என உறுதியாக இருக்கிறேன்.

பொங்கல் பரிசு வழங்குவதில் திமுக அரசு மிகப் பெரிய சொதப்பல் செய்துள்ளது. பொங்கல் பரிசு வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவோம் என கூறிவிட்டு தற்போது எதுவும் வழங்காதது மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் திமுக வெற்றி பெறாது


ஜல்லிக்கட்டில் தடுப்புகள் கூட முறையாக வைக்கவில்லை விவசாயிகள் மீது தடியடி நடத்தபடுவது மிகப்பெரிய கொடுமை. ஜல்லிக்கட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றியது அதிமுக அரசு ஆனால் இந்த நிகழ்ச்சி சரியாக நடக்கக்கூடாது. இளைஞர்கள் உயிர் பறி போகவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். எந்தவொரு அரசாங்கமும் விவசாயிகள் மீது தடியடி நடத்த கூடாது. முறையான அறிவிப்புகள் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு போடாமல் விவசாயிகளை அடித்து விரட்டுவது ஈவு இரக்கமற்ற செயல் சென்ற முறை அதிமுக அரசு சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்தியது இந்த ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது அப்போது ஓபிஎஸ் முதல்வராக இருக்கும்போது தான் அதனால் பழிவாங்கும் நோக்கத்தோடு இவ்வாறு நடக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு முறையாக நடத்தப்பட வேண்டும் என பேசினார்.

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்டுள்ளது உச்சநீதிமன்றமே இது தமிழக அரசு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளது இதற்கு மேல் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை


கார்த்தி சிதம்பரத்தின் கருத்து சமநிலையோடு இருக்கிறது சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது அதை நான் வரவேற்கிறேன் என பேசினார்.

பேட்டி : மாஃபா.க. பாண்டியராஜன் - முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS