மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, கள்ளிக்குடி அருகேயுள்ளது வடக்கம்பட்டி என்ற கிராமம். இந்த கிராமம்தான் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் தாய் வீடு. வடக்கம்பட்டி ஊரில் முனீஸ்வரருக்கு கோயில் உள்ளது. பிழைக்க வழி காட்டிய முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உதிக்கக் காரணமாக இருந்த முனீஸ்வரருக்கு ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் வெள்ளி காலை பால்குடம் எடுத்தும் மாலை அர்ச்சனை தட்டு எடுத்து வந்து முனீஸ்வரருக்கு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் இரவு முழுவதும் கிடா வெட்டு நடைபெற்று, 50 பிரமாண்ட பாத்திரங்களில் சமையல் பணி நடைபெற்றது.