சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கோட்டை பட்டியில் பழமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முதலே மகா யாகம் தொடங்கி தொடர்ந்து சிறப்பு யாகங்கள் நடைபெற்று வந்தது அதனைத் தொடர்ந்து இன்று காலை கோவில்களுக்கு தீட்சிதர்கள் மூலம் கும்பங்களுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது பின்னர் கோவிலில் வீற்றிருக்கும் நவநீதகிருஷ்ணன் சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது இந்த கும்பாபிஷேகத்திற்கு கோட்டைப்பட்டி கிராம மக்கள் மற்றும் அதனை சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.