108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில்,இன்று கோவில் பணியாளர்கள் தன்னார்வளர்கள் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் பக்தர்கள் வழங்கிய ரூபாய் 58,77,888 ரூபாயும், தங்கம் 125 கிராமும், வெள்ளி 1051 கிராமும் மற்றும் வெளிநாட்டு பணம் 49 நோட்டுகள் இருந்ததுள்ளது என ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தகவல் தெரிவித்தார்.