மிசா இராமநாதன்‌ இரங்கல் கூட்டம்; கண்ணீர் விட்டு அழுத எம்.பி திருச்சி சிவா!

ETVBHARAT 2025-06-21

Views 6

புதுக்கோட்டை: மறைந்த திமுக நிர்வாகி விளானூர் மிசா இராமநாதன் இரங்கல் கூட்டத்தில், ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா கண்ணீர் விட்டு அழுது புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், விளானூர் ஊராட்சியை சேர்ந்த, முன்னாள் திமுக மாநில சட்ட திட்ட திருத்தக்குழு‌ உறுப்பினர் மிசா இராமநாதன்‌, நேற்று முன்தினம் (ஜூன் 18) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.  

அவரது மறைவையொட்டி, நேற்று (ஜூன் 19) நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், மிசா இராமநாதனுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில், ராஜ்யசபா எம்பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான திருச்சி சிவா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய எம்.பி திருச்சி சிவா “மறைந்த மிசா இராமநாதன், 50 ஆண்டுகளுக்கு முன்பு சிறைக்கு செல்லும் பொழுது, தன்னை பக்கத்தில் படுக்க வைத்து தைரியம் சொன்னவர்”  என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட்டு அழுதார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

இந்த இரங்கல் கூட்டத்தில், அமைச்சர்கள், கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மற்றும் திருச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கே,கே.செல்லபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS