மழையிலும் 'அரோகரா’ போட்ட முருக பக்தர்கள்! களைகட்டிய ஆடி கிருத்திகை உற்சவம்..

ETVBHARAT 2025-08-16

Views 26

வேலூர்:  வேலூர் மாவட்டம் புதுவசூர் அருகே தீர்த்தகிரி சுப்பிரமணியர் திருக்கோயில் பீடத்தில் 92 அடி உயர முருகன் சிலை அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் முருகனை தரிசித்து வருகின்றனர். 

இன்று மாலை மழை பெய்த நிலையிலும், பக்தர்கள் உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்தனர். மேலும்,  “அரோகரா அரோகரா” என முழக்கமிட்டபடி முருகன் சிலையை சுற்றி வந்தனர். 

தொடர்ந்து பக்தர்கள் சிலைக்கு முன் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து, பேசிய திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர் ஒருவர், “உலகின் மூன்றாவது மிக உயரமான முருகன் சிலையை பார்த்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. மழை வந்தாலும் முருகனை தரிசனம் செய்வதற்கு எங்களுக்கு எந்த தடையும் இல்லை. முருகன் தரிசனம் கிடைத்ததில் ஆனந்தமாக இருக்கிறோம்” என்றார்.

ஆடி கிருத்திகை முன்னிட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்து கொடுத்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS