முன்னால் எம்பி வீட்டில் நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் திமுகவில் வீரபாண்டி ராஜா மற்றும் பனமரத்து பட்டி ராஜேந்திரன் ஆகிய இருதரப்பினருக்கு இடையே மத்திய மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டி நிலவி வருகிறது. இப்பதவிக்கு முன்னால் எம்பி செல்வகணபதி வீரபாண்டி ராஜா அணியின் சார்பில் போட்டியிட முயற்ச்சி செய்து வருகிறார். இதனால் இரு கோஷ்டியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு செல்வகணபதியின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். இதில் அவரது கார் சேதமடைந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Dis : Mystery people have gone to the petrol bombs in the house of Selvapani