ராயலசீமாவின் சொத்தான செம்மரத்தை வெட்டி கடத்துபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவும் தயங்க மாட்டோம் என்று செம்மர கடத்தல் பிரிவு ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செம்மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை பிடிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 4பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 6 நாட்டு துப்பாக்கிகள் தயாரிக்க பயன்படும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக கூறினார். தமிழகத்தை சேர்ந்தவர்கள் செம்மரங்களை வெட்டி கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் செம்மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை பிடிக்கும் போது போலீசாரை தாக்குபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்று ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Dis : IG warns that the smuggling section of Rayalaseema should not be hesitant to cut and kill the smugglers