சினிமாவுக்கான விசிட்டிங் கார்டாக குறும்படங்கள் இருந்த காலம் போய், இப்போது பைலட் ஃபிலிம்கள் வரத் தொடங்கிவிட்டன. யார் வேண்டுமானாலும் ஷார்ட் ப்லிம் எடுத்து விடலாம் எனும் நிலைதான் பைலட் ஃபிலிம் நோக்கி மக்களின் கவனத்தைக் குவித்திருக்கிறது. 'சென்னை என்கிற மெட்ராஸ்' என்ற பெயரில் ஒரு பைலட் மூவி உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை அரவிந்த் குமார் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்த்து ரசித்த ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் கதை இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம், அமெரிக்க திரைப்பட எழுத்தாளர்கள் கில்டு என பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இந்தப் படத்தின் கதை எந்த மொழியின் காப்பியும் அல்ல என நம்பலாம்.
அண்டர்கவர் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் எனும் கான்செப்ட்டை கையில் எடுத்து, அதை வடசென்னையில் நடைபெறும் சம்பவங்களோடு இணைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் குமார்.
சிறப்பான சினிமாட்டோகிராஃபி, பின்னணி இசை என பக்காவாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு 5 பேர் இணைந்து பின்னணி இசை கம்போஸ் செய்திருக்கிறார்கள்.
A pilot movie has been titled 'Chennai engira madras'. Aravind Kumar has directed this film. Surya was released 'Chennai engira madras' trailer. Rajinikanth, who enjoyed this trailer, praised the film crew.