ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. சென்னை ஷெட்யூல் முடிவடைந்ததை தொடர்ந்து இப்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. 'கத்தி' படத்தின் ஷூட்டிங் நடந்த இடங்களில் சென்டிமென்டிற்காக சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டு பின்னர் வேறு பகுதியில் படப்பிடிப்பு நடத்துகிறாராம் முருகதாஸ். 'துப்பாக்கி', 'கத்தி' படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள 'விஜய் 62' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடிக்கிறார். இப்படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இதில் விஜய் இரண்டு பேரை அலேக்காக பைக்கிலிருந்து தூக்கி போட்டு மிதிக்கிறார். இந்த வீடியோ லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Vijay62 fight scene shooting leaked video goes viral on social media.