நடிகை ஸ்ரீதேவி தமிழ்த்திரையுலகம் தாண்டி இந்திய திரையுலகிலும் ஆதிக்கம் செலுத்தியவர். குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி பின்னர் கதாநாயகியாக ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழில் திரைப் பயணத்தை தொடங்கிய ஸ்ரீதேவி பாலிவுட்டில் ஹீரோயினாக ஜொலித்தார். இவர் வீட்டில் வேலைசெய்த மாலைராஜா என்பவர் தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார். நடிகை ஸ்ரீதேவி மனிதாபிமானத்துடன், எளிமையாக பழகக்கூடியவர் என்று அவரது வீட்டு முன்னாள் வாட்ச்மேன் மாலைராஜா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 1980-களில் முன்னணி நடிகையாக இருந்த காலத்தில் ஸ்ரீதேவி சென்னையில் வசித்தார். அப்போது அவரது வீட்டில் வாட்ச்மேன் வேலைக்கு ஆள் தேவை என்பதால் நெல்லையை சேர்ந்த மாலைராஜா என்பவரை ஸ்ரீதேவி வேலைக்கு அமர்த்தினார். மாலைராஜா இன்றும் ஸ்ரீதேவி வீட்டுக்கு எதிரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வாட்ச்மேனாக உள்ளார். நானும் எதிர்புறம் உள்ள அபார்ட்மெண்டுக்கு வாடகைக்கு வந்துவிட்டேன். அவரது மரணச்செய்தியை காலையில் தான் அறிந்தேன். எனது சகோதரி ஒருவரை இழந்தது போல் உணர்கிறேன், ஸ்ரீதேவி என்றால் இனிமையாக பழகும் அவரது முகம் தான் நினைவுக்கு வருகிறது. அவர் இல்லாததை நினைத்து பார்க்க முடியவில்லை." என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் மாலைராஜா.