ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
திருப்பூர் மகாலட்சுமி நகரில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநரின் மகன் விவேகாணந்தன் திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றார் . இந்நிலையில் பள்ளியில்உணவு இடைவேளையின் போது தனது நண்பர்களுடன் உணவருந்திவிட்டு தாமதமாக வந்த காரணத்தால் ஆசிரியர் திட்டியதாக தெரிகிறது இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்துகொண்டுள்ளான் வீட்டிற்கு வந்த மாணவனின் தந்தை மகன் தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.