திமுகவின் கொள்கை இந்தியாவிற்கே தேவை திருச்சி சிவா

Oneindia Tamil 2018-03-06

Views 95

திமுகவின் கொள்கை தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கே தேவை படும் நிலை உள்ளது என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 24 மற்றும் 25 ஆம் தேதி திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உள்ள மண்டல மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்ஈரோட்டில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெருந்துறையில் நடைபெற உள்ள மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மாநாட்டில் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் கொண்டுவர உள்ள தீர்மானங்கள் அனைத்தும் இன்றைய சூழலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார் . தொடர்ந்து பேசிய அவர் பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் தற்போது ஒரு முகத்தனைநிலவுவதாகவும் இந்த இக்கட்டான சூழலில் திமுகவின் திராவிட கொள்கைகள் தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கே தேவை படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

Trichy Siva said that the DMK policy is not only for Tamil Nadu but also for India

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS