பாஜகவுக்கு தோல்வியை பரிசாக தந்த மேல்ஜாதி அரசியல்- வீடியோ

Oneindia Tamil 2018-03-16

Views 1.9K

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் மவுரியா ஆகியோர் போட்டியிட்டு வென்ற லோக்சபா தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவியிருப்பது அக்கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை. உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய கையோடு 'தலையெடுத்த' மேல் ஜாதி அரசியல்தான் இந்த மரண அடிக்கு காரணம் என கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற 100 நாட்கள் தொடர்பாக ஆங்கில ஊடகங்கள் சிறப்பு கட்டுரைகளை கடந்த ஆண்டு எழுதியிருந்தன. அதன் தலைப்புகளில் ஒன்று "பாஜகவுக்கு சவால் விடும் உ.பி. அரசில் மீண்டும் தலைதூக்கும் மேல்ஜாதி ஆதிக்கம்" என்பதுதான். உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை பண்டிட்டுகள், தாகூர்கள், பிராமணர்கள், கயஸ்தா, காத்ரி, பூமிகார் மேல்ஜாதியினராக கருதுகின்றனர். யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் 5 முக்கிய அமைச்சர்களில் 4 பேர் மேல்ஜாதியினர்தான்.

According to the media reports, the return of Upper Caste Domination in the UP Govt is one of main reason for the BJP's loss of By polls.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS