திமுகவின் அரசியல் பாரம்பரியம் என்பது பிணத்தின் மீது அரசியல் செய்கின்ற கட்சி.மனித உயிர்களை மலிவாக நினைத்து செய்கின்ற அரசியலை திமுக தொடர்ந்து செய்து கொண்டு இருப்பதை பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என்று மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பேட்டி...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்... தமிழகம் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் தேர்தலை சந்திக்கிறது 9 மாவட்ட ஊராட்சிகளிலும் பாரத ஜனதா கட்சி களம் காண்கிறது. ஊராட்சி தேர்தலில் பாரதிய ஜனத கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் தேர்தல் உடன்படிக்கைகள் வருமா,தொகுதி பங்கீடுகள் குறித்து பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அண்ணா திமுகவின் தலைமையும் அமர்ந்து முடிவெடுப்பார்கள். அதற்கு பிறகு டெல்லி தலைமை இறுதி முடிவு எடுக்கும். நாங்கள் களம் காண்பதற்கு தயாராக உள்ளோம் கூட்டணிகளை பற்றி தலைவர்கள் முடிவெடுப்பார்கள். தொடர்ந்து நீட் தேர்வை பற்றிய சர்ச்சைகளுக்கு திமுக உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. திமுக நீட் தேர்வு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.நீட் தேர்வு என்பது முடிந்து போன விஷயம் இந்த யதார்த்தத்தை மக்களுக்கு திமுக சொல்லியாக வேண்டும். திமுகவின் அரசியல் பாரம்பரியம் என்பது பிணத்தின் மீது அரசியல் செய்கின்ற கட்சி.மனித உயிர்களை மலிவாக நினைத்து செய்க்கின்ற அரசியலை திமுக தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதை பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.