தி.மு.க மண்டல மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் விதமாக முக ஸ்டாலின் உருவம் கொண்ட பொம்மையுடன் சைக்கில் பேரணி நடைபெற்றது
மார்ச் 24 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டை அடுத்த பெருந்துறை சரளை பகுதியில் தி.மு.க மண்டல மாநாடு மிகப் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. கிட்டத்தட்ட 95 சதவிகிதப் பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள பணிகள் இரவு பகலாக பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே ஸ்டாலின் போல் தோற்றமுடைய பொம்மை ஒன்று சைக்கிளில் சென்றபடியே மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து பிரச்சாரம் செய்து அசத்தி வருகிறது. வெள்ளை பேன்ட் சட்டையுடன் கழுத்தில் தி.மு.க துண்டோடு இளைஞரணி ஆரம்பித்தபோது ஸ்டாலின் இருந்த தோற்றத்தில் அந்த பொம்மை இருக்கிறது. முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்ட அந்த பொம்மையானது மோட்டார் மூலமாக தலையை இரண்டு பக்கமும் அசைக்கும் விதமாகவும் காலில் பெடல் செய்து சைக்கிள் சக்கரம் சுழலும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கில் பேரணியை திமுகவை சேர்ந்த சுப்புலெட்சுமி ஜெகதீசன் துவங்கி வைத்தார் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவது போன்ற உருவாக்கப்பட்டுள்ள இந்த பொம்மையானது வாகனத்தின் மூலமாக ஈரோடு மாநகரைச் சுற்றி மாநாட்டு விளம்பரங்களை ஒலிபரப்பி பிரச்சாரம் செய்து வருகிறது
des : Cycle rally was held with a figure of facial expression to call DMK regional conference