#suseenthiran #nextmovie #tweet
The shooting of director Suseenthiran's next titled 'Champion' that is based on football, starts from today.
கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கும், 'சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, நான் மகான் அல்ல உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் கடைசியாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் ரிலீசானது. அதனைத் தொடர்ந்து 'ஏஞ்சலினா' என்ற படத்தை இயக்கினார் சுசீந்திரன். புதுமுகங்கள் நடித்த இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதற்கிடையே 'ஜீனியஸ்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ள சுசீந்திரன், தனது அடுத்த பட படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார்.