முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆப்கானிஸ்தான் இந்தியாவிடம் இன்று நல்லதொரு பாடத்தைக் கற்றுக் கொண்டது. ஒரே நேரத்தில் சுழலையும், வேகத்தையும் சமாளிக்க முடியாமல் அந்த அணி சரிந்து போனது. இந்திய ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை இன்று 474 ரன்களுக்குப் பறி கொடுத்தது. ஷிகர் தவான் 107, முரளி விஜய் 105 ரன்கள் எடுத்தனர். அதிரடி காட்டிய பாண்டியா 71 ரன்களைக் குவித்தார்.
india Vs Afganisthan first innings