நேற்று நடந்த ஏ பிரிவு ஆட்டத்தில் சவுதி அரேபியா, எகிப்து அணிகள் மோதின. கடைசி விநாடியில் கிடைத்த கோலால் 2 -1 என எகிப்தை அபாரமாக வென்றது சவுதி அரேபியா. இருப்பினும் 2 அணிகளும் தொடரை விட்டு வெளியேறின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எகிப்து வீரர் சலா இந்த தொடரில் முதல் கோலை அடித்தார். அடுத்த போட்டியில் ஏ பிரிவில் உள்ள ரஷ்யா மற்றும் உருகுவே அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே சிறப்பாக விளையாடிய உருகுவே ரஷ்யாவை ஆட்டம் காண வைத்தது. அடுத்தடுத்து அடித்த கோல்களால் 3 க்கு 0 என்ற கணக்கில் உருகுவே அபார வெற்றி அடைந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரஷ்யா தோல்வி அடைந்தாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பி பிரிவில் ஈரான் - போர்ச்சுகல் அணிகள் மோதின. இதில் 1க்கு 1 என்ற கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. இருப்பினும் 5 புள்ளிகளுடன் கிறிஸ்டியானோ ரொனால்டாவின் போர்ச்சுகல் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. பி பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், ஸ்பெயின், மொராக்கோ அணிகள் மோதின. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. மொராக்கோ முதல் சுற்றுடன் வெளியேறிய நிலையில், ஸ்பெயின் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV