லாரிகள் வேலை நிறுத்தம்...பல கோடி இழப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-07-21

Views 347

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலகோடி ரூபாய் சரக்குகள் தேக்கமடைந்துள்ளதுடன் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் பெட்ரோல் டீசல் ஜி.எஸ்டிக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் மூன்றாம் நபர் காப்பீட்டுதொகை பன் மடங்கு உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து லாரி சங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தினால் திருப்பூர் ஈரோடு சேலம் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தேக்கமடைந்துள்ளது. மேலும் நீலகிரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பூ காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதிகளும் பாதிப்படைந்துள்ளது. லாரிகளின் வேலை நிறுத்தினால் பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கமடைந்துள்ளதுடன் அரசுக்கு நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரிகளின் வேலை நிறுத்ததினால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

des: The Lorry Owners' Association has been on strike since today to demand various demands. This has resulted in the loss of multi-crore rupees and losses of several thousand crore rupees.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS