லாரிகள் வேலை நிறுத்தினால் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வர்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், காலாவதியான சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும், மூன்றாம் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் 5வது நாளாக தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முக்கிய நகரங்களில் பல ஆயிரம் கோடிரூபாய்க்கு மேல் வர்தகம் பாதிப்படைந்துள்ளது. ஈரோட்டில் லாரிகள் வேலை நிறுத்தத்தினால் ஜவுளி பொருட்கள் எண்ணெய், மாட்டு தீவனம் கோழி தீவனங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளது. சரக்குகள் தேக்கமடைந்துள்ளதால் இது வரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் வர்தகம் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் தூத்துக்குடியில் லாரிகள் வேலை நிறுத்தினால் 6 ஆயிரம் டன் உப்புகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் தொழிலாளர்களும் வேலை இழப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Des : More than 150 crore rupees have been damaged by trucks.