பள்ளி குழந்தைகள் பொத் பொத் என்று கீழே விழுவதாகவும் சாலையை சீரமைகாவிட்டால் நகராட்சி அலுவலகத்தை பூட்டுவேன் என்று எச். ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்டத்தினால் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதுடன் ஒருசிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் சாலைகளை சீராமைக்க கோரி பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட எச். ராஜா செய்திளார்களை சந்தித்தார். அப்போது சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பொத் பொத் என்று கீழே விழுவதாக கூறினார். சாலையை நகராட்சி நிர்வாகம் விரைவில் சீரமைக்கா விட்டால் அலுவலகத்தை இழுத்து மூடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Des : Having said that the school children will fall down and drop down the municipal office if it does not change the road. The king said.