சென்னை பெருங்குடி - தரமணி இடையேயான பறக்கும் ரயில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிமெண்ட் சிலாப்பை வைத்துள்ளனர். கடந்த 30 ம் தேதி நள்ளிரவில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்டிருந்தது. இது உடனடியாக பார்த்து அகற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு மர்மநபர்கள் சிமெண்ட் சிலாப்பை வைத்துள்ளனர். கடந்த 6 நாட்களில் 2வது முறையாக சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்டது.