40 அடிஉயர அலங்கார நுழைவுவாயில்..பலியான உயிர்-வீடியோ

Oneindia Tamil 2018-11-28

Views 356

கொடைக்கானலில்பள்ளிவாசல் 40 அடிஉயர அலங்கார நுழைவுவாயில்கட்டிடவேலையின்போதுதவறிவிழுந்தவாலிபர்பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காமராஜர் சாலையில் பள்ளிவாசல் அலங்கார நுழைவுவாயில் அமைக்கும்பனி கடந்த 3 மாதங்கள் நடந்து வருகிறது.இந்த அலங்கார நுழைவுவாயில் சுமார் 40 அடி உயரத்தில் கட்டுமான பணியில் நடந்துவந்துள்ளது. இந்நிலையில் இன்று AITUC நகரை சேர்ந்த ராஜ்குமார் வயது 32 இவர் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.கொத்தனார் வேலை செய்து வந்த ராஜ்குமார் பள்ளிவாசலில் அலங்கார நுழைவுவாயில் கட்டுமான பணி செய்துகொண்டிருக்கும் போது கால் தவறி 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்த ராஜ்குமார் தலையில் பலத்த அடி ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த கொடைக்கானல் காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்

Des: Kodikanalil polivasal 40 feet in the top of the decorative entrance hallway

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS