விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து
குடும்பத்தினருடன் வழிபட்டார்...
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது இந்த நிலையில் பொது இடங்களில் சிலையை வைத்து வழிபடவும் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
மேலும் பக்தர்கள் வீடுகளிலேயே விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது
அதன்படி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து பால் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்தார் அதனைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை செய்து அவரின் குடும்பத்தினருடன் விநாயகரை வழிபட்டார்
மேலும் தமிழக முதலமைச்சர் விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Tamilnadu CM Edappadi Palaniswamy does pooja for lord ganesh with his family