Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-
எக் காத்தி ரோல் வித் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்:
பிசைந்து வைத்த சப்பாத்தி மாவு
நூடுல்ஸ்
வெங்காயம்
தக்காளி
முட்டை
முட்டை கோஸ், காரட் , பீன்ஸ் - 1 கப்
சோயா சாஸ்
தக்காளி சாஸ்
ஸ்ப்ரிங் ஆனியன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மல்லித் தூள் - - 1/2 டீ ஸ்பூன்
ஜீரா தூள்- 1/2 டீ ஸ்பூன்
செய்முறை:
மசாலா செய்முறை:
குழியான சட்டியில் எண்ணையை ஊற்றி அதில் நறுக்கிய முட்டை கோஸ், காரட் , பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.அது சற்று வெந்ததும் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
இத்துடன் உப்பு, மிளகாய்த்தூள் ,மல்லித் தூள் மற்றும் ஜீரா தூள் தலா - 1/2 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.. மசாலா ரெடி..
நூடுல்ஸ் செய்முறை:
வெந்த நூடுல்ஸ் மற்றும் தயார் செய்து வைத்த மசாலா சேர்த்து கலக்கவும்..
அத்துடன் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கலக்கவும் ..
சுட சுட நூடுல்ஸ் தயார் ..
எக் காத்தி ரோல் செய்முறை:
பிசைந்து வைத்த சப்பாத்தி மாவு கொண்டு சப்பாத்தி சுடவும் . சப்பாத்தியின் ஒரு பக்கம் மீது உடைத்த முட்டை , மிளகு தூள் , சிறிது உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்..
பின்பு தயார் செய்து வைத்த மசாலாவை அந்த சப்பாத்தி மீது தடவி ரோல் போல சுற்றவும்..
சுட சுட எக் காத்தி ரோல் தயார் .
Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV