கரூர் மாவட்ட ஆட்சியர்l அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தீ குளிக்க முயற்சி - தன் வீடு மற்றும் காலி இடத்தை 4 பேர் காலி செய்யச் சொல்வதாக குற்றச்சாட்டு. கரூர் மாவட்டம் பொருந்தாலூரை அடுத்த தெலுங்கப்பட்டியை சார்ந்தவர் மாரியாயி. வயது 65. அந்த கிராமத்தில் சுமார் 20 ஆண்டுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருகிறார். கணவர் முத்துச்சாமி இயற்கை எய்துவிட்ட நிலையில் 2 மாற்றுத் திறனாளி பெண் பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில், அதே பகுதியை சார்ந்த தென்னூரான், முத்துலட்சுமி, கணேசன், சாந்தி ஆகியோர் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கின்றனர்.
karur grandma police complaint