ஈரோடு மாவட்டம்., கோபிசெட்டிபாளையம் பகுதியில், ஒரு பக்க காகிதத்தில் 9036 பிள்ளையார் உருவங்களை வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கோபியை சேர்ந்த கல்லூரி மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் மோகன் கூலித்தொழிலாளியான இவரது மகன் தருன்ராஜ் தனியார் கல்லாரியில் பி.எட் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார் இவருக்கு பத்து வயது முதலே ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு ஏற்ப்பட்டதால் வீட்டில் எப்போதும் ஓவியங்களை வரைவதிலேயே ஆர்வம் காட்டி வந்தார். ஓவியம் வரைவதற்காக எந்த சிறப்பு பயிற்சியும் எடுத்துக்கொள்ளாமல் பள்ளியில் படிக்கும்போதே தொடர்ந்து தீவிரமாக பல்வகை ஓவியங்களை வரைந்து அதற்கென பல பரிசுகளையும் பாராட்டு சான்றிதழகளையும் பெற்றுள்ள நிலையில்., இவரின் ஓவியும் வரையும் திறமையை கண்டு இவர் படிதத கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் பேராசியர்கள் இவரின் ஓவியங்களை கல்லூரி மற்றும் பள்ளிகளில் கண்காட்சியாக மாணவர்களின் பார்வைக்கு வைத்து இவரின் திறமையை ஊக்குவித்தனர். தருன்ராஜ் வழக்கமான ஓவியர்களை போல ஒரே பானியை பின்பற்றாமல் புள்ளி ஓவியும், பென்சில் ஒவியம் ,கோடு ஓவியம் நீர் வண்ண ஓவியம் உட்பட உலக முழுவதும் உள்ள கலைஞர்கள் பின்பற்றும் அனைத்து விதமான ஓவியங்களையும் மிக நேர்த்தியாகவும் , அழகாகவும் வரையும் திறமையை பெற்றுள்ளார். மேலும் தருன்ராஜ் தற்போது கல்லூரியில் பயிலும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பல அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே ஓவிய பயிற்சியினை வழங்கி வருகின்றார். இந்நிலையில் இவரது ஓவியம் வரையும் திறமைக்கு சவாலாக உலக சாதனை படைக்கும் ஆசையில் அதற்கான பயிற்சியை கடுமையாக மேற்கொண்டபின் ஆன்லைன் மூலமாக சாதனை படைக்க தயாராகினார். தொடர்ந்து ஜாக்கி என்ற உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் கண்கானிப்பில் ஆன் லைன் மூலமாக நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று ஒரு பக்க வெள்ளை காகித்தில் 35 மணி நேரம் தொடர்ச்சியாக 9036 பிள்ளையார் உருவங்களை வரைந்து முடித்தார். இதற்கு முன்பாக ஒருபக்க காகித்ததில் அதிகபடசமாக 900 உருவங்கள் வரைந்துள்ளதே கின்னஸ் சாதனையாக உள்ள நிலையில் தருன்ராஜ் வரைந்த 9036 உருவங்கள் இனி யாரும் எளிதில் முறியடிக்க முடியாத உலக சாதனையாக ஜாக்கி புக் ஆப் வேர்லடு ரெக்கார்டு என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதாக நடுவர்குழு அறிவித்த பின் அதற்கான விருதுடன் சான்றிதழையும் வழங்கியது. தருன்ராஜ் உலகசாதனை படைத்ததை அறிந்து அவர் படித்து வரும் கல்லூரியின் பேராசிரியர்கள் ஊர்பொதுமக்களும் மற்றும் நண்பர்கள் அவருக்கு பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். தருன் ராஜின் சாதனை குறித்து சாதாரண கூலித்தொழிலாளியான தருன்ராஜின் தந்தை மோகன் கூறுகையில்., தருன்ராஜ் வரையும் ஓவியங்களை இந்திய அளவிலும் உலக அளவிலும் காட்சி படுத்தும் வாய்ப்பினை அரசு உருவாக்கி கொடுத்தால் அவர் பல பரிசுகளையும் , விருதுகளையும் பெறுவார் என்றும் அரசு ஓவிய பயிற்சி பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பினை வழங்கினால் வறுமை காரணமாக ஓவியம் வரைவதில் ஏற்படும் பொருளாதார பின்னடைவுகள் தீர்ந்து மேலும் பல சாதனைகளை செய்வார் என்று கூறினார்