#BOOMINEWS | அச்சமில்லை அச்சமில்லை - தற்கொலை தீர்வல்ல - நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள் |

boominews 2021-09-18

Views 2

தற்கொலை தீர்வல்ல -வீடியோ மூலம் நடிகர் சூர்யா உருக்கம்

அச்சமில்லை அச்சமில்லை - தற்கொலை தீர்வல்ல - நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்றும் எதற்கும் தற்கொலை தீர்வல்ல என்பதையும் நடிகர் சூர்யா அறிவுறுத்தி தன்னபிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், மாணவ, மாணவியர் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; ஒரு தேர்வு உங்களுடைய உயிரைவிட பெரியது அல்ல என்று நடிகர் சூர்யா கூறினார்.

தமிழக்தில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. இதனிடையே நீட் தேர்வு அச்சம், பெற்றோர் வற்புறுத்தல், நீட் அரசியல் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில், தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த ஆண்டும் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துவரும் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்று நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்துள்ளார். இதுவரை 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், 3வது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இந்தநிலையில், நீட் தேர்வுக்கு முந்தைய நாள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதேபோல, அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த வழக்கறிகர் கருணாநிதி. இவரது இரண்டாவது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். நீட் தேர்வு எழுதிய இந்த மானவை நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு - ருக்மணி தம்பதியரின் மகள் செளந்தர்யா. பன்னிரண்டாம் பொது தேர்வில் 600க்கு 510 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வெழுதிய செளந்தர்யாவும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் இருந்த மாணவி சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS