நீட் தேர்வு தற்கொலைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசே அரசே பொறுப்பு ஏற்க வேண்டும், மதுரையில் திருமாவளவன் பேட்டி.
மதுரையில் சனாதனம் பெண்களை ஒடுக்கும் கருத்தியல் என்கிற புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டார், இந்நிகழ்வில் கொளத்தூர் மணி, பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் கூறுகையில் "அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கனிமொழி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டு உள்ளார், இந்தாண்டு நீட் தேர்வால் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர், நீட் தேர்வு தற்கொலைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசே அரசே பொறுப்பு ஏற்க வேண்டும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க சட்ட முன் வடிவை கொண்டு வந்ததுள்ளது இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமைந்துள்ளது, மருத்துவ கல்விக்காக மாணவர்கள் அச்சப்பட கூடாது, மருத்துவம் படித்தால் தான் வாழ்க்கை என்கிற பிரம்மையில் இருந்து மாணவர்கள் வெளியே வர வேண்டும், மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன், பெரியார் என்பவர் தனி நபர் அல்ல, அவர் ஒரு கோட்பாடு, பெரியார் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடினார், பெரியார் பிறந்த நாள் தமிழகத்தின் திருநாள், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மீது பாஜக கால்புணர்ச்சியுடன் பேசுகிறது, திமுக நீட் தேர்வுக்கு எதிராக தேர்தலில் சொன்னது போல எந்தவொரு அரசும் செய்யாத சட்ட முன் வடிவை கொண்டு வந்துள்ளது, இந்தி பேசக்கூடிய மக்கள் மட்டுமே நீட் தேர்வால் பயன் அடைவார்கள், மாநில பாடங்களை பயின்ற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது, தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையத்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளேன்" என கூறினார்