விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களை கவுரப்படுத்தும் விதமாக தேசிய கொடியேற்றியே ஏற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது தூய்மை பணியாளரை தேசியக்கொடி ஏற்ற வைத்து கௌரவப்படுத்திய ஊராட்சி மன்ற தலைவருக்கு குவியும் பாராட்டுக்கள்
இந்தியா முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்திய பிரதமர் மோடி டெல்லியிலும் அந்தந்த மாநில முதல்வர்கள தங்கள் மாநிலங்கள் என அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது இதில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கடந்த 15ம் தேதி 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொரோனா பேரிடர் காலத்தில் தனது உயிரை பணயம் வைத்து பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள் கவுரவிக்கும் பொருட்டு தூய்மை பணியாளராக பணிபுரியும் மாரியப்பன் என்பவரை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி யுள்ளர் தூய்மைப் பணியாளர் மாரியப்பன் தேசியக்கொடி ஏற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் தூய்மை பணியாளரை தேசியக்கொடி ஏற்ற அனுமதித்த ஊராட்சி மன்ற தலைவர் குறிஞ்சிமலர் அழகர் சாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன