ஆச்சரியத்தில் வியக்க வைத்த அதன் தோற்றம்வியபாரிகளே ஆச்சரியத்தில் பார்த்து வியந்தனர்7 அடி உயரம் கொண்ட வாழைத்தார் 350 க்கும் மேற்பட்ட பழங்கள் கொண்டது இரண்டுதார்கள் ரூ 2200க்கு ஏலம் போனது –கரூரில் சுவாரஸ்யம்
கரூர் ரயில்நிலையம் அருகே உள்ள வாழைக்காய் மார்க்கெட் கமிஷன் மண்டியில்,வாழைத்தார்கள் ஏலம்விடுவது வழக்கம், இந்த மார்க்கெட்கமிஷன் மண்டிக்கு கரூர், புகளூர், வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், நொய்யல், நாமக்கல், புகளூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்துவாழைத்தார்கள் கற்பூரவள்ளி, பூவன், ரஸ்தாலி, ஏழரசி, மொந்தன், பச்சைப்பழம்என்கின்ற பச்சலாடம்பழம் ஆகியவைகள் ஏலத்திற்கு வரும், இந்நிலையில், இங்கு ஏலம் விடப்படும் வாழைப்பழங்களை தார்கணக்கில் எடுத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்துசெல்வார்கள். இந்நிலையில், இன்று காலைநாமக்கல் மாவட்டம், பொத்தனூர்மற்றும் இடையாறு ஆகிய பகுதிகளில் காவிரிகரையோரம் விளைந்த கற்பூரவள்ளிவாழைத்தார்கள் சுமார் 20 க்கும்மேற்பட்டவைகள் விற்பனைக்கு வந்தன. இந்நிலையில், ஒவ்வொன்றும் 5 அடி முதல் 7 அடி உயரம் கொண்டவைகளாக இருந்தவை என்பதுகுறிப்பிடத்தக்கது, இன்று ஏலத்திற்குவந்த வாழைத்தார்கள் ஒரு தார் ஒன்று பூவன் ரூ 650 க்கும், ரஸ்தாலி ரூ 550, பச்சலாடம்பழம் என்கின்ற பச்சைப்பழம் ரூ 450க்கு விற்பனையானது. ஆனால்,கற்பூரவள்ளி தார்கள் 7அடி உயரம் கொண்டவைகள்சுமார் 350 க்கு மேற்பட்டபழங்கள் கொண்ட ஒரு தார் ரூ 1100 க்கு ஏலம் போனது,இரண்டு தார்கள் ரூ 2200க்கு விலை போனது. கரூர்வரலாற்றிலேயே 7 அடி உயரம்கொண்டது இந்த ஒரு வாழைத்தார் என்பதும், முதன்முறையாக இந்த அளவிற்கு உயரம் கொண்ட வாழைத்தார் என்பதினால் ஆச்சரியத்துடன்வாழைத்தார்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆள் இந்தவாழைத்தார்கள் இரண்டினை பிடிப்பதற்கு மூன்று பேர் தேவைப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.