கரூர் நகரில் மட்டும், ஏராளாமான கறிகோழிகடைகளிலும் சரி, அந்த கோழிகளை வைத்து பிரியாணி அதாவது சிக்கன் பிரியாணிகள் விற்கப்படுவதாகவும், அதற்கு மேல் காலவதியான உணவுப்பொருட்கள் பல்வேறு கடைகளில் விற்கப்படுவதாகவும் உணவுபாதுகாப்பு துறையினருக்கு தகவல் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் மாவட்ட ஆட்சியர் உத்திரவிற்கிணங்க, என்று கரூர் பேருந்து நிலையம் மற்றும் ஒரு சில இடங்களில் ஒரே நாளில் ரைடு என்று பெயருக்கு நடத்தி அதில் ஹான்ஸ், பான்பிராக் உள்ளிட்ட குட்கா பொருட்களையும் கைப்பற்றியதோடு, கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனரே தவிர, வேறு, அந்த கடைகளில் உணவுபாதுகாப்பு துறையினர் காலவதியான பொருட்கள் ஏதேனும் உள்ளதா ? என்பதனை கண்டறியாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். ஒரு சில கடைகளில் செத்த கோழிகளை போட்டு, சிக்கன் பிரியாணிகள் விற்கப்படுவதாகவும், சாலையோர கடைகளில் தரமில்லாத அதாவது வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் கவர்களில் மக்கள் உண்ணும் நிலைமை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இந்நிலையில், உணவுப்பாதுகாப்பு துறையினர் இதை கண்டுக்கொள்ளாமலே விட்டு விடுகின்றனர். ஆனால், அவர்களின் மெத்தனப்போக்கினால், காலவதியான கூல்டிரிங்ஸ் குடித்து சிறுமி ஒருவர் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலை தற்போது மாவட்ட அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு லட்சுமி புரத்தில் வசிப்பவர் இளங்கோ. இவரது 13 வயது மகன் கணேஷ். இவரது உறவினரின் 9 வயது மகள் தர்னிதா. இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணியளவில் அருகில் உள்ள தேநீர் கடைக்குச் சென்று டின் கூல்டிரிங்ஸ் (7 Up) வாங்கி குடித்துள்ளனர். இரவு தூங்கச் சென்று விட்ட நிலையில் நள்ளிரவில் இருவருக்கும் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாலை வரை அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில் கூல்டிரிங்ஸ் குடித்ததால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்றும், இப்பிரச்சினை எப்படி வந்தது என்று வந்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். சாப்பிட்ட உணவுடன், கூல்டிரிங்ஸ் குடித்ததால் இப்பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறி அவர்களுக்கு மருத்துவர் சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர். கூல்டிரிங்ஸ் expiry date முடிந்ததாக கூறியுள்ளனர். ஆனால், அதற்கு இன்னும் 4 மாத காலம் இருப்பதை உணவு பாதுகாப்பு அதிகாரி கண்டறிந்துள்ளார். மேலும், அவர்கள் வாங்கி குடித்த கூல்டிரிங்ஸ் கடைக்கு சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரை வீரன் அங்கிருந்த பல்வேறு நிறுவனங்களின் கூல்டிரிங்ஸ் பாட்டில்களை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, அருகில் உள்ள மொத்த விற்பனை கடைக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதில் பழைய தேதியில் தயாரித்த கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் ஏதும் இல்லை எனக் கூறி திரும்பிச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவர்கள் குடித்த பாட்டிலில் எக்ஸ்பைரி டேட் இருந்த்தால் இந்த நிலைமை என்கின்றனர். ஆகவே உணவுப்பாதுகாப்பு துறையினர் இனிமேலாவது மெத்தனப்போக்கினை கடைபிடிக்காமல் இருந்தால் இது போல சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.