#BOOMINEWS | விருதுநகர் சர்க்கரை ஆலையின் நிலுவைத்தொகை வேண்டி விவசாயிகள் நூதன போராட்டம் |

boominews 2021-09-24

Views 7

விருதுநகர் மாவட்டத்தில் தரணி சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூபாய் 10 கோடி நிலுவைத் தொகையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பெற்றுத்தர வேண்டும் எனக் கூறி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மேல்சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக விவசாயிகள் கலந்துகொண்டனர்

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வாசுதேவநல்லூரில் இயங்கிவரும் தரணி சர்க்கரை ஆலைக்கு 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் 1000 விவசாயிகள் கரும்பு வழங்கியதில் அந்த ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு 10 கோடி பண பாக்கி வைத்திருப்பதாகவும் இருப்பதாகவும் விவசாயிகளுக்கு பணம் கிடைக்காததால் விவசாயிகள் பெரிதும் சிரமத்துடன் இருப்பதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இது குறித்து பலமுறை மனு அளித்தும் பல போராட்டம் நடத்தியும் அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது அந்த சர்க்கரை ஆலை திவாலாகி உள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வாதாட யாரும் இல்லாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிலுவையில் உள்ள பத்து கோடி ரூபாயை வட்டியுடன் பெற்றுத்தர வேண்டும் எனக் கூறி இன்று நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளித்தனர்

ராமச்சந்திர ராஜா (தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர்)

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS