டிரைவ்ஸ்பார்க் குழு மற்றும் பெங்களூரை சேர்ந்த என்எம்டபிள்யூ கராஜ் ஆகியவை இணைந்து, ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை, மாடிஃபிகேஷன் செய்து வருவது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இந்த திட்டம் குறித்த தகவல்களை பல்வேறு பாகங்களாக வெளியிட்டு வருகிறோம். முதல் இரண்டு பாகங்கள் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், இது மூன்றாவது பாகம்.
500 சிசி பிக் போர் கிட், பெரிய வால்வுகள், போர்டட் இன்ஜின் ஹெட், ஹை-லிஃப்ட் கேம்ஷாஃப்ட் ஆகியவற்றை நாங்கள் அசெம்பிள் செய்தோம். தற்போது மோட்டார்சைக்கிளில் பொருத்துவதற்கு இன்ஜின் தயாராக உள்ளது. இன்னும் சுவாரஸ்யமான எபிசோடுகளுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்.