ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை; அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர் நீதிமன்றம்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டில் கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி?’’ என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஜூலை 7-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு சரியானதுதான்” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.