குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

ETVBHARAT 2025-10-03

Views 14

தூத்துக்குடி: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.  

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தின் நடுவே மத்தியில் நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகே உள்ள குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.

கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த தசரா திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளியம்மன், கிருஷ்ணன், சிவன் போன்ற  பல்வேறு வேடங்கள் அணிந்து வேடம் அணியும் பக்தர்கள் சொந்த ஊர்களில் தங்கள் குழுவினருடன் பாரம்பரிய கலையான கரகாட்ட கலைஞர்களுடன் நடனமாடி காணிக்கை செலுத்தினர். 

தசரா திருவிழாவின் 10 வது நாளான நேற்று சூரசம்ஹாரம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் குலசேகரபட்டினம் கடற்கரை திடலில் நடைபெற்றது. முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதிக்கு வருகை தந்தார். கடற்கரையில் சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்தனர். அங்கு தன் முகத்துடன் எதிர்கொண்ட மகிஷாசுரனை வதம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து சிங்கமுகம், மாட்டுத் தலை, சேவல் உருவில்  வந்த சூரனையும் அம்மன் வதம் செய்தார். சூரசம்ஹாரம் நடைபெறும் போது கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காளி கோஷம் எழுப்பினர். சூரசம்ஹாரத்தை கண்ட பின்பு வேடமணிந்து விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்களது விரதத்தை நிவர்த்தி செய்து கொண்டனர். 

மேலும், முத்தாரம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதை தொடர்ந்து வான வேடிக்கையும் நடத்தப்பட்டது. இந்த சூரசம்கார நிகழ்ச்சியொட்டி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் விரிவாக செய்யப்பட்டிருந்தன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS