கிடா வெட்டி விருந்து! ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்- வீடியோ

Oneindia Tamil 2017-12-28

Views 1.8K

ரஜினியின் அசைவ சாப்பாட்டு பேச்சை அவரது அரசியல் பிரவேசத்தோடு ரசிகர்கள் ஒப்பிட்டு கலாய்த்துள்ளனர். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இதில் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். ரசிகர்களிடம் பேசிய உங்களுக்கு எல்லாம் கடா வெட்டி கறி சோறு போட ஆசையாக உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால் இங்கு அது முடியாது வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்றார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள் 31ஆம் தேதியும் இதையே கூறிவிட போகிறார் என கிண்டலடித்துள்ளார்.
ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க ஆசை ரஜினி பேச்சு. தமிழர்கள் உப்பிட்டவரையே உயிர் உள்ளவரை மறக்க மாட்டார்கள் கறிவிருந்து ஆஹா ஓகோ பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கே

அன்புள்ள என் ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க ஆசை...ஆனால் ராகவேந்திரா மண்டபத்தில் சைவ சாப்பாட்டுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சாம்பார் சாதத்தை சாப்புட்டு இந்த அன்பு பச்சகிளியின் 2.0 படத்தை மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக ஆக்கி நல்ல வசூலை தரும்படி கேட்டு கொள்கிறேன்...

ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து போட ஆசை-ரஜினி மக்களை ஏமாத்தனும்னா அவங்க ஆசைய தூண்டனும் அதானே!!!


Netizens teasing Rajini talk with fans about non veg food. Rajini said that he is interested to provide non veg food but Ragavendira mandapan is Veg.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS