வேலூர் : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேலூரில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வேலூர் கோட்டை எதிரே உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி
நாட்டின் 75வது சுதந்திரதினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேலூர் அருகே ரங்காபுரம் என்ற இடத்தில் 75 அடி உயரமுள்ள கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வேலூர் கோட்டை எதிரே உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி ராகவன், மாநிலச் செயலாளர் திருமதி கார்த்தியாயினி மற்றும் பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.