தியாகி இமானுவேல் சேகரனின் 64-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருவுருவப் படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனின் 64-வது நினைவு நாளை முன்னிட்டு பழனியப்பா தெருவில் அமைந்துள்ள அதிமுக கரூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் அதைத்தொடர்ந்து பேருந்துநிலையம் ரவுண்டானா அருகே தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சார்பாக வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மேலும் இந்நிகழ்ச்சியில் அதிமுக அவைத்தலைவர் ஏ. ஆர்.காளியப்பன், அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த என பலர் கலந்து கொண்டனர்.