கொரோனா தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக பூட்டப்பட்டிருந்த திரையரங்குகள் தமிழக அரசு உத்தரவின்படி உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாளை திறக்க உள்ள நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் 13 திரையரங்குகள் பராமரிப்பு பணிகள் தீவிரம்
கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் தற்பொழுது தளர்வுகள் அழிக்கப்பட்டு வருவது காரணமாக திரையரங்குகள் நான்கு மாதங்களுக்குப் பிறகு நாளை திறக்க உள்ள நிலையில் இன்று கரூரில் 9 திரையரங்குகளும் குளித்தலை 4 நான்கு திரையரங்குகளும் என கரூர் மாவட்டத்தில் 13 திரையரங்குகளில் உள்ள நிலையில் திரையரங்குகள் பராமரிப்பு பணிகள் தீவிரம் திரையரங்க பணியாளர்கள் திரையரங்குகளை தற்பொழுது தூய்மை செய்து வருகின்றனர் மேலும் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் சுத்தப்படுத்தப் பட்டு வருகிறது இன்று மாலைக்குள் என்ன திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்த கரூரில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் திரையரங்கத்திற்கு பார்வையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சனிடைசர் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த தகவல் பலகை திரையரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது