திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஆசிரியர் சத்தியமூர்த்தி பணியாற்றி வருகிறார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி பகுதிநேர ஆசிரியர் சத்தியமூர்த்தி கிருமிநாசினி தெளிக்கும் கருவி கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை பணி மேற்கொண்டார் . இந்நிகழ்வின்போது செங்கம் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் , முருகன் அன்புக்கரசி மற்றும் தலைமையாசிரியர் பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழு ஆசிரியரை பாராட்டினார்.
வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் தமிழக அரசு அறிவித்த நிலையில்., செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குப்பநத்தம், பரமனந்தல், கிருஷ்ணாபுரம் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளதா? பள்ளி வளாகங்கள் சுகதாரமான சூழலில் உள்ளதா? என வட்டார கல்வி அலுவலர் த.மகேஸ்வரி ஆய்வு செய்தார்.