#BOOMINEWS | மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் அரசுப்பள்ளிகள் தூய்மை பணிகள் |

boominews 2021-08-22

Views 1

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்ட ஆதிபராசக்தி பக்தர்கள் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பணியில் ஈடுபட்டு பள்ளிகள் முழுவதும் தூய்மைப் படுத்தினர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு மையத்தின் சார்பில் தூய்மைப் பணி பணியில் ஈடுபட்டு பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப் படுத்தினர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் மூத்த மகனும், ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவருமான கோ.ப.அன்பழகன் தலைமையில் செங்கம் தொகுதி தலைமைக்குழு மூர்த்தி மற்றும் வெங்கடேசன் முன்னிலையில் பதினைந்து வருட காலமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் காவல் நிலையம் ஊராட்சி மன்ற அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் கோயில்கள் என அனைத்து பகுதியிலும் தூய்மைப் பணி பணி சேவைகள் மேற்கொண்டு வருகின்றனர் இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடத்திற்கு பிறகு செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், தமிழக அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறையில் பின்பற்றப்படும் என்று அறிவித்த நிலையில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தொண்டு இயக்கம் தத்தெடுத்து பள்ளி வகுப்பறை, வளாகம் என அனைத்து பகுதியிலும் தூய்மைப்பணி 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேற்கொண்டனர். இதுகுறித்து கூறியதாவது ; ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் மூலம் பதினைந்து வருட காலமாக சேவையாற்றி படுகிறோம் பள்ளிகள் கோயில்கள் எங்கே எங்களை அழைத்தாலும் நாங்கள் தூய்மை பணி சேவையாற்ற மேற்கொள்ள தயாராக உள்ளோம், மேலும் இந்தப் பள்ளிக்கு வாய்ப்பளித்த தலைமையாசிரியர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர். நிகழ்வில் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் பொறுப்பாளர்கள் லட்சுமி, கோபி, பிரபு, மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS