தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஐயா. ஜி. கே. மூப்பனார் அவளின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு ஐயா. ஜி .கே .மூப்பனார் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரே அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் - ராஜபாண்டியன்., மாவட்ட பொருளாளர் - சேர்மைச்சாமி., மாவட்ட பொதுச் செயலாளர் -மதிவாணன் மாநில இளைஞரணி செயலாளர் -ராஜன்., மாவட்ட இளைஞரணி தலைவர் - ராமலிங்கம்., நகர தலைவர் -எஸ் கண்ணன், நகர பொருளாளர் - லட்சுமணன்., மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் - அனுஷ்யா தேவி, பத்மா, மற்றும் வட்டார, நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்